நாமக்கல் மாவட்டத்தில் கடும் வெப்பத்தின் காரணமாக 15 லட்சம் கோழிகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை அதிகளவில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக நாமக்கல் பகுதியில் வெப்பம் 105 டிகிரி ஆக உயர்ந்துள்ள நிலையில் வெப்பம் தாங்க முடியாமல் 15 லட்சம் கோழிகள் இறந்து விட்டன. இதனால் 1 கோடி வரை முட்டை உற்பத்தி குறைந்து விட்டது. இதனையடுத்து கோழியின் தீவனப் பொருளான சோயா புண்ணாக்கு ஒரு கிலோ 35-லிருந்து 65 உயர்ந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. வெப்பம் அதிகமானது மற்றும் கோழியின் தீவணப் பொருளான சோயா புண்ணாக்கு விலை அதிகமானது இரண்டும் தான் முட்டை விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று முட்டைக்கோழி பண்ணையாளர் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.