பெரம்பலூர் வட்டாரத்தில் 4 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 2,286 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 4 பேருக்கு பெரம்பலூர் வட்டாரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிதம்பரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், தஞ்சை, பெரம்பலூர், சென்னை தனியார் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் 23 பேர் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 808 பேருக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.