மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் ஏழு பேர் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நல சோப்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு திடீரென ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆக்ஸஜன் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் ஏழு பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்தோரின் உறவினர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆக்ஸஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், வயது மூப்பு மற்றும் இணை நோய்கள் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.