கொரோனா நோய் தொற்று காரணமாக ஹரித்வார் கும்பமேளாவிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கும்பமேளா இந்து சமயத்தினரால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு ஊர் ஆற்றுப்படுகையில் சிறப்பாக திருவிழா போன்று நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றால் கும்பமேளா நிகழ்வுக்கு ஹரித்வாரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆற்றங்கரை படுக்கையில் மாபெரும் கூட்டம் கூடியிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படம் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஹரித்வார் கும்பமேளாவிற்கு கூடிய பக்தர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என வைரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடியபோது, இது 2019 கும்ப மேளாவில் நடைபெற்ற திருவிழாவின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்தை தனியார் செய்தி நிறுவனம் ஜனவரி 15, 2019 ஆம் ஆண்டு அன்று பயன்படுத்தி இருக்கின்றது. இந்த வகையில் வைரல் புகைப்படம் சமீபத்தில் கும்பமேளாவில் எடுக்கப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனால் போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலியான செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இதனால் போலியான புகைப்படங்கள் மற்றும் செய்திகளை தயவு செய்து வெளியிடாதீர்கள்.