இந்தியாவில் எஸ்பிஐ வங்கி பற்றி ஐஐடி போம்பே நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அடிக்கடி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். எதற்காக அடிக்கடி பணத்தை எடுக்கிறார்கள் என்று வங்கி வாடிக்கையாளர்கள் புலம்புவது உண்டு. இந்நிலையில் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளில் இருந்து நான்கு பரிவர்த்தனைகளுக்கு பிறகு செய்யப்பட்ட பரிவர்த்தனை களுக்கான அபராதமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 300 கோடியை எஸ்பிஐ வங்கி வசூலித்ததாக ஐஐடி போம்பே நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.