சர்ம ஆரோக்கியத்திற்கு எண்ணெய் சத்து மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு வகையான எண்ணெயிலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
வைட்டமின் ஈ எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இயற்கையாகவே வைட்டமின் ஈ, சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. வைட்டமின் ஈ மாத்திரை சருமத்திற்கு மிகச் சிறந்த அழகு பொருளாக நாம் பயன்படுத்தலாம். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஐ பிரித்து அதில் இருந்து எண்ணெய் எடுத்து சிறிது மஞ்சள் பொடியை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
காபித்தூள், ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து ஸ்கரப் செய்து பின்னர் குளித்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பளபளப்பாக இருக்கும் .
சுருக்கங்கள் மறைய வைட்டமின் ஈ எண்ணெய் முகத்தில் தேய்த்து இரவு அப்படியே விட்டு விட்டு மறுநாள் காலையில் எழுந்து முகத்தை கழுவலாம். இப்படி செய்தால் சின்ன சின்ன சுருக்கங்கள் மறைந்து இளமை தோற்றத்தை பெற முடியும்.