தமிழ் புத்தாண்டு: தமிழர் புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் விழாவை தான் தமிழ் புத்தாண்டு என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட தமிழ் புத்தாண்டு தினத்தை நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.
உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் பின்பற்றும் சமயங்களின் புதுவருடத்தை கொண்டாடுவார்கள் அதேபோல் தமிழர்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்த புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். புத்தாண்டு சமயத்தில் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
தமிழ் புத்தாண்டை வழிபடும் முறை:
1.கண் விழித்தவுடன் கனி காண வேண்டும்:
தமிழ் புத்தாண்டு தினத்தில் விடியற்காலையில் நாம் எழுந்தவுடன் ஏதாவது ஒரு கனியை காண வேண்டும். அந்தக் கனி போல் இந்த வருடம் முழுவதும் நமக்கு நன்மைகளை மட்டுமே தர வேண்டும் என்று நான் எண்ண வேண்டும்.
2. அறுசுவை உணவை படைத்து வழிபட வேண்டும்:
இன்று நாம் இறைவனுக்கு அதாவது சூரிய பகவானுக்கு இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து வழிபட வேண்டும். மேலும் இந்த உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே மகிழ்ச்சியாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.
3. முதல் செலவாக மஞ்சளும் உப்பும் வாங்க வேண்டும்:
புத்தாண்டில் நாம் வாங்கும் முதல் பொருள் உப்பும், மஞ்சளாக இருக்க வேண்டும். ஏனெனில் உப்பு மற்றும் மஞ்சளை லட்சுமி ஆக பார்க்கிறோம். எனவே அந்த நாளில் முதலில் நாம் இதனை தான் வாங்க வேண்டும்.
4. பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்:
நம் வீட்டில் இருக்கும் முன்னோர்களின் ஆசிர்வாதத்துடன் இந்த ஆண்டை நாம் தொடங்க வேண்டும். எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு அவர்களின் காலில் விழுந்து அவர்களின் ஆசீர்வாதத்தை நாம் வாங்க வேண்டும்.
5.பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் நோட்டும், ரூபாய் நோட்டும் கொடுக்க வேண்டும்:
பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்த உடன் நமக்கு பணம் கொடுப்பார்கள். அந்த பணத்தை கொண்டு யாருக்காவது நோட்டு புத்தகத்தை வாங்கி தர வேண்டும்.
6.அன்னதானம் வழங்க வேண்டும்:
இன்றைய நாளில் முடிந்தால் யாருக்காவது அன்னதானம் வழங்குங்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம். அப்படி செய்யும்போது புண்ணியம் நமக்கு கிடைக்கும்.