Categories
மாநில செய்திகள்

மண்ணெண்ணெய் அளவு குறைப்பு… மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப் படும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசை மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் காரணமாக ரேஷன் கடைகளில் அளவு குறைக்கப்பட்டதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே 20% மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டம் மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றது. தற்போது மாநிலம் முழுவதும் 20 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |