Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோர்ட்டு ஊழியருக்கு கண்டறியப்பட்ட தொற்று… திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல்… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் கோர்ட்டு ஊழியர் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் மிகக் குறைவாகவே இருந்தது. சுமார் 22 ஆயிரம் பேருக்கு பொது சுகாதாரத்துறை மூலம் வரும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் முதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு நாள் தினமும் 5 முதல் 8 பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் கிராமத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் இளநிலை கட்டளை பணியாளராக பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த வாரம் இவர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் குழுவினர் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து துரைராஜுக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் துரைராஜுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஓயாமரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

Categories

Tech |