Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நாளை மாலை வரை… வெளியான அதிரடி உத்தரவு….!!!!

வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை மாலை வரை பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. வாக்காள பெருமக்கள் தங்களுடைய வாக்கினை அமைதியான முறையில் செலுத்தினர். ஒரு சில இடங்களில் வாக்கு  இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் வாக்கு பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிந்தபிறகு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடியில் ஸ்கூட்டரில் எடுத்துக்கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் வேளச்சேரி தொகுதி எண் 92 வது வாக்குசாவடியில் வரும் ஏப்ரல் 17ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வேளச்சேரி தொகுதி வாக்குச் சாவடி எண் 92 க்கு உட்பட்ட பகுதியில் நாளை மாலை வரை பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க வும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |