சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக லேசான மழை பெய்தது.
நேற்று முன்தினம் காலையில் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் லேசான மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.