Categories
அரசியல் தேசிய செய்திகள்

இப்படி மாற்ற விடமாட்டேன்…. போர்க்களத்தில் நின்று போராடுவேன் – மம்தா பானர்ஜி

போர்க்களத்தில் நின்று பாஜகவிற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் வரும் 17ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே வகுப்பு வாதத்தை தூண்டும் வகையிலும், மத்திய படைகளுக்கு எதிராக பேசியதாகவும் கூறி மம்தா பானர்ஜியின் பரப்புரைக்கு 24 மணிநேரம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கொல்கத்தாவில் உள்ள காந்தி சிலை அருகே மம்தா நாள் முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டார். அப்பொழுது ஓய்வின்றி வரிசையாக படங்களை வரைந்து தனது ஓவிய திறமையை அவர் வெளிப்படுத்தினார்.

தேர்தல் ஆணையம் விதித்த 24 மணி நேர தடை நிறைவு பெற்றதும் போராட்டக் களத்தில் இருந்து கிளம்பிய மம்தா, பராசத்  என்ற இடத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றார்.  அங்கு கூடியிருந்த பெண் தொண்டர்கள் உற்சாக நடனம் ஆடி மம்தாவை வரவேற்றனர். கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி பாஜக அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பயன்படுத்தி தன்னை தடுப்பதோடு, மேற்கு வங்கத்தையும்  கைப்பற்ற துடிப்பதாக குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்கத்தை குஜராத் ஆக விடமாட்டோம் என்று கூறிய அவர், தான் தாக்கப்பட்டால் தக்க பதிலும் கிடைக்கும் என தெரிவித்தார். பணம் மற்றும் அதிகார பலம் கொண்ட  தங்களுக்கு ஏன் தோல்வியே  கிடைக்கிறது என்பதை  பாஜக எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கூறிய மம்தா, ஏனென்றால் தாம் ஒரு பெரும் போராளி என்றும் போர்க்களத்தில் நின்று தொடர்ந்து போராடுவேன் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |