பிரசாந்தின் அந்தகன் படத்தில் மாஸ்டர் பட நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்த படத்தில் நடிகை பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் பாலிவுட்டில் தபூ, ராதிகா ஆப்தே, ஆயுஷ்மான் குரானா ஆகியோர் நடிப்பில் வெளியான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
#Poovaiyar on Frame in #StaarMovies @actorprashanth *ing @actorthiagaraja Dir #Andhagan @SimranbaggaOffc @thondankani @PriyaAnand #RaviYadhav #SenthilRaghavan #Karthik @iYogiBabu #KSRavikumar @utharamenon5 #Oorvasi @manobalam @vanithavijayku1 #Leelasamsamson @onlynikil pic.twitter.com/H1G0r8HWaE
— Nikil Murukan (@onlynikil) April 13, 2021
மேலும் மூன்று தேசிய விருதுகளை வென்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார் . சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் மாஸ்டர் பட நடிகர் பூவையார் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .