கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை நிவேதா தாமஸ் திரையரங்குக்கு சென்று தான் நடித்த படத்தை பார்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் தான் நடித்து வெளியாகியுள்ள வக்கில் சாப் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்த்து அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார். அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் எப்படி திரையரங்குக்கு போகலாம் என ரசிகர்கள் சரமாரியாக ட்விட்டரில் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அவர் தனக்கு கொரோனா நெகட்டிவ் ஆகிவிட்டது என விளக்கம் அளித்துள்ளார்.