பட்டர் காபி, புல்லட் ப்ரூஃப் காபி என்றும் அழைக்கப்படும் இந்த காபி தான் இப்போ புது ட்ரெண்டிங். டல்கோனா காபி போல இதுவும் பிரபலமாகி வருகிறது. இந்த காபியில் உள்ள கொழுப்பின் அளவு நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படுதல் தடுக்கப்படுகிறது என்றும் இதன் மூலம் எடை குறைய உதவும் என்றும் கூறப்படுகிறது. பட்டர் காபி குடல் சார்ந்த பிரச்சனைகளையும் தீர்க்கிறது. இந்த பட்டர் காபி பொதுவாக எந்த இனிப்புகளும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் விரும்பினால், தேவையான சுவைக்கு ஏற்ப சிறிது சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை தூள் – 1/2 பிஞ்ச்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
காபி – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் காபி தூள் சேர்த்து கொதி நிலைக்கு வரும் வரை சூடாக்கவும். அதன் பின்னர் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் தேங்காய் எண்ணெய், வெண்ணெய், ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் மற்றும் காய்ச்சி வைத்த காபி தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலக்க நீங்கள் ஒரு பிளெண்டர் அல்லது மிக்சியையும் பயன்படுத்தி 3 முதல் 4 நிமிடம் இந்த கலவை கிரீம் பதத்திற்கு வரும் வரை நன்றாக பிளெண்ட் செய்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் அதிக நுரையுடன் கிரீமியாக பட்டர் காபி தயார்.