செங்கல்பட்டு மாவட்டத்தில் வனப்பகுதிகளிலுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் தற்போது கோடைக் காலம் என்பதால் வனப்பகுதியிலுள்ள குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விலங்குகள் தண்ணீர் மற்றும் இறை தேடி ஊருக்கும் புகும் நிலை ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் வன விலங்குகள் ஊருக்குள் செல்வதை தடுக்கும் முயற்சியில் வனப்பகுதிகளிலுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து வனச்சரகர் பாண்டுரங்கன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் டிராக்டர் மூலம் தண்ணீர் எடுத்து சென்று வனப்பகுதியிலுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பியுள்ளனர். இதனால் விலங்குகள் ஊருக்குள் செல்வதை தவிர்க்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.