கணவன் இறந்து சில நாட்களே ஆன நிலையில் பிரிட்டன் மகாராணியார் தன் கடமையை செய்ய பணிக்கு சென்றுள்ளார்.
பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் 73 ஆண்டுகள் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த மகாராணியார் அவர் இல்லாமல் இனி எப்படி வாழ போகிறார் என்ற கேள்வி எழும்பிய நிலையில் அதற்கு பதில் சொல்லும் விதமாக அரச கடமையாற்ற பணிக்கு சென்றுவிட்டார். EarlPeel என்பவர் அரண்மனையில் மூத்த அலுவலர் ஆவார். அவர் மகாராணியின் வலது கைபோல் இருந்து 14 ஆண்டுகள் சிறப்பான பணியை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் இளவரசரின் இறப்பையும் மீறி தங்களுக்காக பணியாற்றிய அவரை கௌரவிப்பதர்காக மகாராணியார் பணிக்கு சென்றுள்ளார்.