Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த நாட்களில் போக கூடாது…. அரசின் அதிரடி அறிவிப்பு… சோகத்தில் மூழ்கிய மீனவர்கள்…!!

மத்திய மாநில அரசுகள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை  கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்ததால் மீனவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்  அதனை  கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால்  தமிழகத்தில் போக்குவரத்துதுறை, மீன்பிடித்தொழில் போன்ற பல்வேறு தொழில்கள் முடங்கிக் கிடந்தது.  இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு விதி முறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கின்றனர் .

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மூலம் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் செல்வதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினால் மீனவர்கள் போதிய வருவாய் இல்லாமல் தங்களது வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும்  சிரமப்பட்டு வந்தனர். இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால்  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். ஆனாலும் தற்போது உயர்ந்து வரும் டீசல் விலையால் மீனவர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.  இந்நிலையில் மத்திய மாநில அரசு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல  இந்த ஆண்டு தடை விதித்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இந்தத் தடை காலத்தை அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய 2 மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும், மீன்பிடிக்கும் தடை காலத்தை 45 நாட்களாக குறைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்காத மத்திய மாநில அரசுகள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை என 6 1 நாட்கள் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்துள்ளது.  இதனிடையே  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Categories

Tech |