Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்னால வேலைக்கு போக முடியலயே..! லாரி டிரைவர் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் வேலைக்கு செல்ல முடியாத மனவேதனையில் லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் 3-வது வார்டு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் டிப்பர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மோனிகா (5), அரவிந்த் (9) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனின் இரு கால்களிலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அவருக்கு வலி இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |