பிரிட்டனில் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கலப்பு தடுப்பூசி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கலப்பு தடுப்பூசி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் 50 வயதுக்கு மேற்பட்ட கொரோனா வைரஸ் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றவர்கள் தங்களது இரண்டாவது டோஸ் செலுத்தும் போது கலப்பு ஆய்வை பயன்படுத்தி கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் டோஸ் ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியும் இரண்டாவது டோஸ் செலுத்தும்போது மற்றொரு தடுப்பூசியும் செலுத்தி அதன் பயனை கண்டறியும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தடுப்பூசிகளை இணைப்பதன் மூலம் புதிய தொற்று நோய்களை தடுக்கும் என்றும் நீண்ட காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் டோஸ் அஸ்ட்ராஜெனேகா செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி அதே மருந்தாகவும் இருக்கலாம் இல்லையேல் மாடர்னா மற்றும் நோவாக்ஸ் மருந்தாகவும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 800 பேர் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.