தேனியில் கார் மோதியதில் ஆட்டோவில் இருந்த சிறுவன் உட்பட 2 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியில் ஆட்டோ டிரைவரான அரவிந்த் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் முந்தலிருந்து போடி நோக்கி லோகேஸ்வரன் என்ற சிறுவனை ஏற்றிக் கொண்டு தனது ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் குரங்கணி சாலையில் ஆட்டோவை திருப்ப முயன்றபோது, இவருக்கு எதிரே வந்த கார் திடீரென்று ஆட்டோ மீது மோதியது.
இதில் அரவிந்தனும், சிறுவனும் படுகாயமடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இருவருமே ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுனரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.