ஹூன்டாய் நிறுவனம் தனது புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
பிரபல ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா மாடலில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் தொழில்நுட்ப வசதிகளையும் பொருத்தி புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முதல்முறையாக வென்யூ மாடல் காரில் அறிமுகம் செய்யப்பட்ட டியூயல் டோன் டயமன்ட் கட் அலாய் சக்கரங்கள் தான் இந்த புதிய வெர்னா மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிப்புறம் குரோம் , புரொஜெக்டர் லைட், பார்க்கிங் விளக்கு மற்றும் இன்டிகேட்டர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகவும், பி.எஸ்6. புகை சான்று விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கொண்ட 128 ஹெச்.பி. திறன், 260 nm டார்க், 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம், எலன்ட்ரா மாடலில் உள்ளதைப் போன்ற தொடுதிரை வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரில் கிரில்லுடன் இணைந்த வகையில் இருக்கும் மிகப் பெரிய முகப்பு விளக்கு ஒரு சிறப்பம்சமாகும். இந்த புதிய மாடல் வெர்னா கார் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், டொயோட்டா யாரிஸ், ஸ்கோடா ராபிட், போக்ஸ்வேகன் வென்டோ போன்ற மாடல் கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.