Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதுதான் கடைசி எபிசோட் என்பதை நம்பவே முடியல’… குக் வித் கோமாளி சிவாங்கியின் உருக்கமான டுவீட்…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவடைவது குறித்து சிவாங்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப் பெரிய அளவு பிரபலமடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும். மேலும் சமூக வலைத்தளங்களில் கனி தான் டைட்டில் வின்னர் என்றும் ஷகிலா, அஸ்வின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர் என்றும் தகவல் பரவி வருகிறது .

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சிவாங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இன்று குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே . இதுதான் கடைசி எபிசோடு என்பதை என்னால் நம்பவே முடியல . நான் இந்தப் பயணத்தை மிகவும் நேசிக்கிறேன். எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி நிறைவடைவதால் ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர்.

Categories

Tech |