சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் எம்.நகரில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்று விட்டு ஷாலினி தனது சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் தனது சைக்கிளில் செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, செங்குன்றத்தை நோக்கி வேகமாக சென்ற வேன் ஷாலினியின் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஷாலினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.