Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாழ்கை முழுவதும் போராட்டம்தான் …! தடைகளை தாண்டி தடம் பதித்த …இளம் வீரர் சேத்தன் சக்காரியா…!!

முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ,சேத்தன் சக்காரியாவிற்கு  ரசிகர்கள் ,கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன .

நேற்று முன்தினம் நடந்த  பஞ்சாப்  ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .  இதில்  ராஜஸ்தான் அணியின்  இளம் வீரரான சேத்தன் சக்காரியா, பஞ்சாப் அணிக்கு எதிராக  3 விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் முதல் போட்டியிலேயே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார் .சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த 22 வயதுடைய  சேத்தன் சக்காரியா ராஜஸ்தான் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை 1.2 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் வாங்கியது.சேத்தனுக்கு  கிடைத்த வாய்ப்பு ,அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைக்கவில்லை. சேத்தன் சக்காரியாவின்  குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் .

அவரின் தந்தை டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை காரணமாக ,டிரைவர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கிரிக்கெட் ஆடிக் கொண்டும், மறுபுறம் வேலை பார்த்துக் கொண்டும் குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் சேத்தன்.தம்பியின் தற்கொலை ,குடும்ப வறுமை  இப்படி பல போராட்டங்களுக்கு பிறகு ,நடந்து முடிந்த பஞ்சாப் -ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டியில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. இவர் 4 ஓவர்களில் பந்து வீசியதில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஏழ்மை நிலையிலும் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, தொடர்ந்து கிரிக்கெட் போட்டியிலும் சாதனை படைத்துள்ள சேத்தன் சக்காரியாவிற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |