Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேர்தலன்று ஏற்பட்ட தகராறு… பெரம்பலூரில் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி வழக்குப்பதிவு..!!

பெரம்பலூரில் தேர்தலன்று ஏற்பட்ட மோதல் காரணமாக 15 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவன் என்ற மகன் இருந்தார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பாசறை செயலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 6-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றபோது எறையூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றின் முன்பு இவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த ஜெய்சங்கர், மணிகண்டன், முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட 15 பேர் தேவனிடம் கட்சிக் கொடிகள் தெருக்களில் கட்டப்பட்டது தொடர்பாக தகராறு செய்துள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேவன் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் 15 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |