Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இரண்டாவது நாளாக பெய்த மழை… குளிர்ந்த காற்று வீசியதால்… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் இரண்டாவது நாளாக பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வெப்பம் அதிகம் நிலவும் பகுதியாக உள்ளது. மேலும் அப்பகுதியில் பகல் நேரத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடை வீதிகளுக்கு செல்லவும் மிகுந்த சிரமமாக உள்ளது. இதனால் பலர் பகல் நேரத்தில் வெளியில் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலமாத்தூர், வேப்பூர், வயலப்பாடி, புதுவேட்டக்குடி, ஆகிய பகுதிகளிலும் வெயில் கொளுத்தியது.

இந்நிலையில் குன்னம் பகுதியில் கடந்த 11-ம் தேதி கோடை மழை பெய்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக கடந்த 12-ஆம் தேதி மேலமாத்தூர், பேரளி, க.எறையூர், கோவில் பாளையம், புதுவேட்டக்குடி ஆகிய கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. மேலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |