உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநில தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மருத்துவ ஆலோசனைப்படி அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா ஏற்பட்டதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்ததால்தான் தனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.