பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் நீதிபதி உட்பட 4 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவால் கோர்ட் நீதிபதி ஒருவர் உட்பட 4 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,349 ஆக அதிகரித்துள்ளது. இதில் கொரோனாவால் 22 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவுக்கு 32 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.