Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நான் ஒரு ஓரமா தானே போயிட்டு இருந்தேன்… இப்படி நடக்குமுன்னு நினைக்கல…. கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையோரம் நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இளஞ்சாவூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கண்ணன் திருமயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே சாலையில் நடந்து வந்த பழனியப்பன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கண்ணனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பழனியப்பன் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |