ராணிப்பேட்டையில் மனைவி இறந்த துக்கத்தை தாங்காத கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கூலி வேலை பார்த்து வந்த செல்வமும், அவரது மனைவியும் வசித்து வந்தனர். இந்நிலையில் தூங்கிக்கொண்டிருந்த உமா தூக்கத்திலேயே இறந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் செல்வம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து உறவினர்கள் அனைவரும் அவரது உடலை பார்த்துக்கொண்டு அழுதனர்.
இதற்கிடையே கணவர் இவரது வீட்டிற்கு அருகிலிருந்த கொட்டகையில் துக்கம் தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் எங்கே சென்றாலும் ஒன்றாக தான் செல்வார்களாம். இவர்களின் இந்த இறப்பு செய்தி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்.