Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை அதிக விலைக்கு விற்றால்… கடும் நடவடிக்கை பாயும்… அதிகாரி எச்சரிக்கை..!!

பெரம்பலூரில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உரங்கள் 8,012 மெட்ரிக் டன் அளவில் இருப்பில் இருந்தது. இதில் டி.ஏ.பி. 472 மெட்ரிக் டன், யூரியா 1,576 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 4,344 மெட்ரிக் டன், பொட்டாஷ்ரம் 1,196 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 424 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. உரங்களை உரிய ரசீதுடன் உர முட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை இணைய கருவி மூலமே விற்பனை செய்ய வேண்டும். இருப்பு விவரங்களை விற்பனை செய்தவுடன் சரியாக பராமரிக்க வேண்டும். உரிய ஆவணங்களின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ, அதிக விலைக்கு உரங்களை விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரம் விலை மற்றும் இருப்பு விவரங்கள் அடங்கிய தகவல்கள் பராமரிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு அனுமதி பெறாத உரங்களை விற்பனை செய்யக்கூடாது. பொட்டாஷ், டி.ஏ.பி., சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகியவை தற்போதும் 2020-21 ஆம் ஆண்டு விலையிலேயே விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் உர கட்டுப்பாடு ஆணையின்படி உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் வேளாண் இணை இயக்குனர் கருணாநிதி தெரிவித்தார். மேலும் தரமற்ற உரங்களை விற்பனை செய்வது மற்றும் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்வது குறித்து விவசாயிகளுக்கு தெரியவந்தால் ஆலத்தூர் வட்டார வேளாண்மை அலுவலரை 9786436433, பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை 9787061637, வேப்பூர் வேளாண்மை அலுவலரை 9361109874, வேப்பந்தட்டை வேளாண்மை அலுவலரை 9442746911 மற்றும் வேப்பூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா கிருஷ்ணனை 9487073705 என்ற செல்போன்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |