Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படி முழுவதும் சாம்பலாயிருச்சே…. தீப்பிடித்து எரிந்த நார் பண்டல்கள்… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் நார் மில்லில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கே.ஆர். தோப்பூர் பகுதியில் நார்மில் ஒன்று நீண்ட வருடமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நார் பண்டல்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நார்மில் ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து தவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் நார் பண்டல்கள் அனைத்திலும் தீ வேகமாக பரவியதால் தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் நார் பண்டல்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |