Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘கோலி இடத்துல நான் இருந்திருந்தா’…கண்டிப்பா இந்த முடிவ தான் எடுத்திருப்பேன் …! முன்னாள் வீரர் சொன்ன விஷயம் …!!

 பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை பற்றி , மாண்டி பனேசர் கருத்து   தெரிவித்துள்ளார் .

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக  அஸ்வின் மற்றும் ஜடேஜா இவருக்கும், டெஸ்ட் மற்றும் மற்ற போட்டி தொடர்களின் மட்டுமே வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதைப்பற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மாண்டி பனேசர் கூறுகையில், தற்போது இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கு பிரச்சனை இல்லை என்றும், ஆனால்  சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில், இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான உலக கோப்பை டி20 போட்டி நடைபெற இருப்பதால், இந்திய அணிக்கு இது புதிய சிக்கலாக உள்ளது.

தற்போது சுழற்பந்து வீச்சாளர்களாக விளையாடிவரும் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ்  ஆகியோர்  மோசமான சொதப்பி வருகின்றன  . இதனால் உலக கோப்பை டி20 போட்டியில், இந்திய அணிக்கு மிகப் பெரிய பிரச்சனை ஆகிவிடும். இதுவே  நான் மட்டும் கோலி  இடத்தில் இருந்திருந்தால், சற்றும் சிந்திக்காமல் முன்னணி வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை கண்டிப்பாக தேர்வு செய்வேன் . ஏனெனில் அவர்கள் இருவரும் பல சர்வதேச போட்டிகளில் விளையாட அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆவர். இதனால் தகுந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எனவே இப்படிப்பட்ட வீரர்கள் இருக்கும்போது ,அஸ்வின், ஜடேஜா-வை  ஏன்  உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யக்கூடாது? என்று பனேசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |