Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெங்களுருவில் இருந்து வந்து… சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெங்களூருவைச் சேர்ந்த காதல் ஜோடி சென்னையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள சித்தாலபாக்கம் அரசன்கழனி பிரதான சாலை தனியார் குடியிருப்புக்கு பக்கத்தில் இளம்பெண்ணும், 30 வயது மதிக்கத்தக்க ஆணும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பெரும்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பெரும்பாக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருவில் வசித்து வந்த அபினாஷ் என்பதும், அந்த இளம்பெண் அவரது உறவினரான பல்லவி என்பதும்  தெரியவந்துள்ளது. இவர்கள் இரண்டு பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

ஆனால் பல்லவியின் பெற்றோர் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெங்களூருவில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அபினாஷின் தங்கை வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் பல்லவி அபினாஷ் உடன் இருப்பதை அறிந்த அவரது பெற்றோர் மீண்டும் பெங்களூருக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் காதல் ஜோடிகள் பெங்களூருக்கு செல்வதாக கூறி விட்டு இரவு கிளம்பியுள்ளனர். அதன் பின் பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மனமுடைந்த காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பெங்களூருவில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |