நேற்று சென்னையில் ஒரேநாளில் ரூபாய் 2,56,800 அபராதம் வசூலித்த சென்னை மாநகராட்சி அதிரடி காட்டியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது வெளியில் எச்சில் துப்புவது களுக்கு ரூபாய் 500 அபராதமும் விதித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை முக கவசம் அணியாத 4878 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ரூ. 947800 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் முகக் கவசம் அணியாத 1284 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.2,56,800 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி முகக்கவசம் அறியாதவர்களுக்கு கடும் எச்சரிக்கையையும் கொடுத்துள்ளது.