Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முன்னாடியும் இப்படிதான் நடந்துச்சு…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மூதாட்டி வீட்டின் கதவை திறந்து மர்ம நபர்கள் 4,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளிபாளையம் பகுதியில் ரங்கநாயகி என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். கடந்த 6 வருடத்திற்கு முன்பு இந்த மூதாட்டியின் கணவர் ஆறுமுகம் என்பவர் இறந்து விட்டார். இந்நிலையில் ரங்கநாயகி நாயக்கனூரில் இருக்கும் தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வந்து கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது தான் பூட்டிவிட்டு சென்ற கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அவரின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபோது மர்மநபர்கள் யாரோ வீட்டிற்குள் வந்து பீரோவில் வைத்திருந்த துணிகளை கலைத்துவிட்டு அதில் இருந்த 4 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மூதாட்டி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பாகவே ரங்கநாயகி வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 4 பவுன் தங்க நகையும், அதன் பிறகு இரண்டு செல்போன்களும் திருடு போனது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |