நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் செல்லப்பிள்ளை படத்தின் மோஷன் டீஸர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் கௌதம் கார்த்திக் ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் என்னமோ ஏதோ, வை ராஜா வை, இவன் தந்திரன், தேவராட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து பத்து தல உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Happy to share #Chellappillai motion teaser ☺️ congrats team.https://t.co/cKJgRYwoWW#Chellappillai#Netaji125@Gautham_Karthik @Arun_chandhiran @Theeson_Music @SSTproduction @DoneChannel1 @CtcMediaboy
— VijaySethupathi (@VijaySethuOffl) April 14, 2021
தற்போது நடிகர் கௌதம் கார்த்திக் இயக்குனர் அருண் சந்திரன் இயக்கத்தில் செல்லப்பிள்ளை படத்தில் நடித்து வருகிறார் . தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்தப் படத்தின் மோஷன் டீஸர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் செல்லப்பிள்ளை படத்தின் மோஷன் டீசரை விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர் .