தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7000 தாண்டக் கூடும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7000 ஐ தாண்டக் கூடும் என்று ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அவர் நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும், கூட்டம் கூடுவதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். மார்க்கெட் போன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு வீட்டிற்கு செல்லும் ஒருவர் மூலம் 10 பேருக்கு கொரோனா பரவுகிறது. எனவே அனைவரும் மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.