சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக உருவெடுத்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தடுப்பூசி போடுவதை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த 11ஆம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 14 ஆயிரத்து 674 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 19 ஆயிரத்து 377 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.