தனது மனைவியின் தங்கையான 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் சக்திவேல் என்ற சமையல் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேலின் மனைவியின் தங்கையான 9 வயது சிறுமியும் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமிக்கு சக்திவேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து சக்திவேல் அந்த சிறுமியை நிர்வாணமாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் சக்திவேலின் செல்போனை எடுத்து பார்த்த அவரது மனைவி தனது தங்கையின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த சிறுமி தனது தாயாரிடம் நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.