Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 8 மாசம் தான் ஆச்சு… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணம் முடிந்து எட்டு மாதமே ஆகிய நிலையில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூரில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நர்மதா தனது தாயார் வீட்டிற்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து திடீரென சதீஷ்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல் துறையினர் சதீஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |