Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து இவரு இப்படி செஞ்சிருக்காரு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. மதுரையில் நடந்த சம்பவம்….!!

மதுரையில் பெண் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் கம்பியை கட்டும் தொழிலாளியான மணிகண்டன் என்பவரும், அவரது மனைவியான சபரிமணி என்பவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிகண்டன் மதுவை குடித்துவிட்டு வீட்டிலிருக்கும் மனைவியுடன் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மன விரக்தியடைந்த சபரிமணி பக்கத்திலிருக்கும் குளியலறைக்கு சென்று தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீயை பற்ற வைத்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சபரிமணியை காப்பாற்ற முயன்றதால் அவரும் தீயினுள் சிக்கிக் கொண்டுள்ளார். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |