மதுரையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூரில் பிரவீன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்து விட்டு மது அருந்தி வந்திருக்கிறார். இதனால் பிரவீனுக்கும், அவரது தந்தைக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதற்கிடையே சம்பவத்தன்று பிரவீன் மீண்டும் மது அருந்திவிட்டு வந்ததால் அவருடைய தந்தை கண்டித்தார்.
இதனால் மன உளைச்சலடைந்த அவர் மாட்டு தொழுவத்திற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.