Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல…. மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் குடும்பத்தகராறில் கணவன் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மணியனூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறர். இவருக்கு திருமணமாகி சரளாதேவி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக செல்வத்திற்கும் அவரது மனைவி சரளாதேவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த செல்வம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரளாதேவி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |