கனி குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகள் வைத்துக்கொண்டு சமையல் செய்யப் படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். மேலும் கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சி கலகலப்பாக நடைபெற்று வந்தது. இதில் ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா, தர்ஷா குப்தா, மதுரை முத்து ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
இவர்களில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து வைல்ட் கார்டு சுற்றின் மூலம் ஷகிலா, பவித்ரா இருவரும் பைனல் சுற்றில் நுழைந்தனர். இந்நிலையில் இன்று குக் கோமாளி2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோட் ஒளிபரப்பானது. இதில் கனி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.