திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தடுப்பூசி போட மருத்துவமனைக்கு சென்றவர்கள் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகின்றது. இதனால் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிற நிலையில் தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் தடுப்பூசி போடுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒரு வாரமாக திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வந்தவர்கள் தடுப்பூசி இல்லாமல் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
இதுக்குறித்து மருத்துவர்கள் கூறியுள்ளதாவது ஆரம்பத்தில் தடுப்பூசி போட பொது மக்கள் முன் வராததால் குறைந்த அளவிலே தடுப்பூசி கிடைத்துள்ளது. ஆனால் தற்போது தடுப்பூசி போட மக்கள் அதிகமானோர் முன்வந்துள்ளதால் தற்போது தடுப்பூசி குறைந்து விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.