Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்க சித்திரை மாசம்னா இது தான்..! கிராம மக்களின் வினோத திருவிழா… அம்மனுக்கு சிறப்பு படையல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம், லாடபுரம் கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் முழுவதும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா ஊராடங்கால் கடந்த வருடம் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படவில்லை. இந்த வருடமும் கொரோனாவினால் கோவில் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முயல் வேட்டை திருவிழாவிற்கு சித்திரை மாதத்தில் அனுமதி மறுக்கப்படும் என்று கருதப்படுகிறது. இதனால் அம்மாபாளையம், லாடபுரம் ஆகிய கிராமங்களில் சித்திரை மாதம் பிறப்பதற்கு முன்பாகவே முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு வீட்டுக்கு ஒருவர் அந்த கிராமங்களில் இருந்து மாரியம்மன் கோவில் முன்பு கூடினர். அப்போது அம்மனுக்கு சிறப்பான பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்பு காட்டு பகுதிக்கு அவர்கள் முயல் வேட்டைக்காக புறப்பட்டனர். இதையடுத்து கிராமத்திற்கு அவர்கள் வேட்டையாடியதில் கிடைத்த முயல்களை கொண்டு வந்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு முயல் கறி படையல் இடப்பட்டது. அந்தப் படையலில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சமமாக பங்கு பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் முயல் கறியை சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.

Categories

Tech |