Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இவங்க வந்துட்டாங்க”, இருந்தாலும் தன்னாலயே சரியாயிடுச்சு…. இடி, மின்னலுடன் மழை…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதால் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மதிய வேளைக்கு பின்னால் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் விக்கிரமசிங்கபுரத்தில் வசித்து வரும் முத்தையா என்பவரது வீட்டிலிருக்கும் தென்னை மரத்தின் மேற்பகுதியில் திடீரென்று மின்னல் தாக்கியது.

இதனால் அம்மரம் தீப்பிடித்து எரிந்தது. இதற்கிடையே அவரது வீட்டிற்கு அருகிலிருந்த பாஸ்கர் என்பவர் வீட்டிலிருந்த மின் விசிறிகளும், மின் விளக்குகளும் சேதமாகியது. இச்சம்பவம் குறித்து அம்பையிலிருக்கும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் மீண்டும் பெய்த மழையால் மரத்திலிருந்து தீ தானாகவே அணைந்துவிட்டது.

Categories

Tech |