Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியில இருக்கும் போதே திடீர்னு இப்படி ஆகிடுச்சு…. நிவாரண நிதி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் பணியில் இருக்கும்போதே உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையிலிருக்கும் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சுப்பிரமணியன். இந்நிலையில் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்திருக்கிறது. இதனால் இவர் திடீரென்று கடந்த 14.3.20 தேதியன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே இவர் பணியை ஆற்றிக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்ததால் தமிழகத்தின் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து, அவரது குடும்பத்தினருக்கு 3,00,000 ரூபாய் நிதியாக வழங்கப்பட இருந்தது. இதனை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன், அவரது மனைவி வசந்தகோமதியிடம் வழங்கியுள்ளார்.

Categories

Tech |